பாரதம் கண்ட எண்ணற்ற கலைகளில் தொன்மையானது பரதம். பரத நாட்டியத்தின் வரலாறு கி.மு 2-வது நூற்றாண்டில் துவங்குகிறது. பரத முனிவர் எழுதி நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவானது பரத நாட்டியம். கி.மு 2 மற்றும் கி.பி. 2-வது நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டிய சாஸ்திரத்தை எழுதினார் பரத முனி.
கோவில்களில் அக்காலத்தில் தேவதாஸிகள் எனப்படும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் பெண்கள் இருந்தார்கள். இவர்கள்தான் பரதக் கலையை வளர்த்தவர்கள். பரதத்தை முறையாக ஆடி வந்தவர்கள். இந்தக் கலை இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கு நாம், அக்கால தேவதாஸிகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
மராத்திய, சோழ மன்னர்கள் காலத்தில் பரத நாட்டியம் கொடி கட்டிப் பறந்தது. இவர்களின் ஆட்சிக்காலத்தை, பரதத்தின் பொற்காலம் எனலாம். பரதத்திற்கு சதிர் என்றும் ஒரு பெயர் உண்டு. முன்பு இருந்த பரத நாட்டியத்திற்கும், இப்போதைய வடிவத்திற்கும் இடையே நிறைய, ஆறு வித்தியாசங்கள் இருந்தன.
இன்றைய பரத வடிவத்தை, தஞ்சாவூர் நால்வர் என அழைக்கப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் உருவாக்கினார்கள். இவர்கள் முறைப்படுத்திய பரதம்தான் இன்று ஆடப்பட்டு வருகிறது.
அன்று பரதம் மிகப் புனிதமாக கருதப்பட்டது. பரதக் கலைஞர்களுக்கு ராஜ மரியாதைதான். பொன்னும், பொருளும் மன்னர்களால் வாரி வழங்கப்பட்டது. நல்ல ஆதரவும் இருந்தது. ஆனால் இந்த கோலாகலத்திற்கு ஒரு நாள் முகலாயர்கள் வடிவில் முடிவு வந்தது.
முகலாய மன்னர்களின் வரவிற்குப் பிறகு கோவில்களில் பரதம் ஆடுவது தடைபட்டது. பெர்சிய நாடுகளிலிருந்து நடனக்காரர்களை முகலாயர்கள் இந்தியாவுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தேவதாஸிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களது நடனத்தைப் பார்க்க ஆதரவு குறைந்தது.
முகலாயர்கள் போய், வெள்ளையர்கள் வந்தனர். நிலைமை இன்னும் மோசம் ஆனது. மன்னர்கள், ஜமீன்தார்களின் ஆதரவு குறைந்தது. தேவதாஸிகளுக்குக் கிடைத்து வந்த ஆதரவு நின்று போனது. வயிற்றுப்பாட்டுக்குத் திண்டாட்டம். வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களை விபச்சாரத்திற்குத் தள்ளியது.
கலை என்ற பார்வையிலிருந்து வேறு மாதிரியாக பரதம் பார்க்கப்பட்டதால், பணக்காரர்களும், செல்வந்தர்களும் தங்களது பெண் பிள்ளைகள் பரதம் கற்பதை நிறுத்தினர். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் பரதம் இழிவாகப் பார்க்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் முதல் பாதி வரை இந்த நிலை நீடித்தது.
வெள்ளையர் ஆட்சிக்குப் பிறகு நிலைமை மாறியது. பரதத்தின் உண்மை வரலாறு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது. பாரதத்தின் புராதன கலையாக அது பார்க்கப்பட்டது. தேய் பிறையாக இருந்த பரதம், வளர் பிறையானது. அதை வளர்த்தவர்களில் முக்கியமானவர் கலாஷேத்ரா கண்ட ருக்மிணி அருண்டேல் முதலான பலர். இந்தியாவின் முதல் பரதக் கலைக் கூடத்தை நிர்மானித்தவர் ருக்மிணி அருண்டேல்.

No comments:
Post a Comment