Sunday, September 14, 2008

தொல்குடியினரது ஆடல்கள்


உலகெங்கிலும் காணப்பட்ட தொன்மையான ஆடல்களிடையே பல பொதுப் பண்புகள் இடம்பெற்றுள்ளன. ஒரு வகையில் மானிடத்தின் அடிப்படை அடையாளங்களை நடனங்கள் புலப்படுத்தி நின்றமையால் அகிலத்தின் பொது மொழியாகவும் அமைந்துள்ளன. தொல்குடி மக்களிடத்து பாய்ந்து எழுதலோடு இணைந்த ஒலி எழுப்பி ஆடல்கள் (Noise Making Dances பரவலாக இடம்பெற்றிருந்தமையை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். (Lawler 1964) பாய்ந்து தாவிக் குரலெழுப்பி ஆடுதலைப் போர் நடனங்கள் என்று எழுந்தமானமாகக் கூறி விட முடியாது. அவ்வகை ஆடல்கள் இரண்டு நோக்கங்களின் பொருட்டு எடுத்தாளப்பட்டன. அவை,

பாய்ந்து எழுந்து குரல் எழுப்பி ஆடுவதன் வாயிலாக உயர்ந்த தாவரங்களுக்கு உருவேற்றிக் கூடுதலான விளைவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இணைந்த மாயவித்தை நோக்கமாகவும் அந்நடனங்கள் அமைந்துள்ளன.

அமைதியின்றி ஆடும் அவ்வகை ஆடல்கள் வளப் பெருக்கைத் தூண்டி விளைச்சலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை மேலோங்கியிருந்தது. அத்துடன் அவ்வகையான ஆடல்களும் குரவை ஒலிகளும் கெடுதல் விளைவிக்கும் ஆவிகளையும் தேவதைகளையும் விரட்டிக் கலைத்துவிடும் என்று தொல் குடி மக்கள் நம்பினர். இவற்றை ஆராயும் பொழுது உலகின் தொன்மையான ஆடல் மரபுகளுடன் சங்கமிக்கும் பல ஒப்புமைகளைத் தமிழர்களது தொன்மையான ஆடல் மரபுகளிலும் காண முடியும். சிலப்பதிகாரம் குறிப்பிடும் ஆச்சிரியர் குரவை, குன்றக் குரவை முதலாம் ஆடல்களில் ஒலியெழுப்பி ஆடல்களாகவும் தீவிர உடலசைவுகளைக் கொண்ட கூட்டு நிலை ஆடல்களாகவும் அமைந்தன. தமிழ் மரபில் வளப் பெருக்க ஆடல்கள் மாரி அம்மன் வழிபாட்டுடன் இணைந்த ஆடல்களாக இன்றும் நிலைகளை விரட்டும் ஆடல்கள் பேயோட்டி ஆடல்கள் என யாழ்ப்பாணத்து மரபில் அமைக்கப்பட்டன.

அதிக உடல் வலுவைப் பிரயோகித்துக் கூட்டு நிலையிலே கூட்டுணர்ச்சியுடன் பேயோட்டி ஆடல்கள் ஆடப்பெற்றன. அதிக உடல் வலுவைப்பயன்படுத்தி ஆடப்பெற்றவை மாய்ச்சல் எனவும் யாழ்ப்பாணத்து ஆடல் மரபிலே அழைக்கப்பட்டது.

ஆடலில் மிடற்றால் மட்டும் ஒலியெழுப்புதலின் போதாமையை அறிந்தவேளை கைதட்டி ஒலி எழுப்புதலும் குச்சிகளை முழவுகளில் மோதி ஒலி எழுப்பி ஆடுதலும் வளரலாயிற்று. தோற்கருவிகளைத் தாங்கி ஒலி எழுப்பி ஆடுதல் முழலாட்டம் எனப்பட்டது. தொல்குடியினரிடத்து உலோகக் கருவிகளின் பயன்பாடு வளர்ச்சியடைய உலோகத் தகடுகள் வாள், கோடரி, முதலியவற்றை ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடும் மரபு வளரலாயிற்று. இவ்வகை ஆடலின் ஒரு வளர்ச்சியே சேமக்கல ஒலி எழுப்பி ஆடும் மரபாகும். கேரளத்து கதகளி ஆடலின் சேமக்கலம் மூலாதாரமான இசைக் கருவியாக இன்றும் விளங்குகின்றது. யாழ்ப்பாணத்து மரபில் சேமக்கலம் தாங்கி ஆடுதல் சேமக்கலச்சங்கை எனப்பட்டது. உலோகக் கருவிகளாகிய வேல் சூலாயுதம் முதலியவற்றைக் கைகளில் ஏந்தி ஆடும் மரபும் தமிழர் பாண்பாட்டிலே வளர்ச்சியுறத் தொடங்கியது. கெடுதல் செய்யும் ஆவிகளை விரட்டியடிப்பதற்கு வேலாயுத நடனமும் சூலாயுத நடனமும் பயன்பட்டன. மிக அண்மைக் காலம்வரை வேலாயுத நடனமும் சூலாயுத நடனமும் யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் நிலவிவந்தன.

கெடுதல் செய்யும் ஆவிகளை விரட்டும் ஆடல்கள் மரங்களைச் சுற்றி வட்டமிட்டு ஆடும் ஆடல்களாகவும் பாதிக்கப்பட்டவரைச் சுற்றி வட்டமிட்டு ஆடும் ஆடல்களாகவும் அமைந்தன. சுற்றி வட்டமிட்டு ஆடும் பரப்பு பேயோட்டில் பரப்பு எனப்பட்டது. வட்டமிட்டு ஆடும் பொழுது ஒருவரோடு மற்றவர் கை கோர்த்து ஆடும் மரபின் வளர்ச்சி கூட்டுணர்வால் தீய ஆவிகளை விரட்டலாம் என்ற நம்பிக்கையை வலியுறுத்தியது. யாழ்ப்பாணத்துப் பழைய மட்பாண்டங்களிலும் நீர்ச் செம்புகளிலும் அவற்றின் கழுத்தைச் சுற்றிக் கை கோர்த்து ஆடும் பெண்களின் ஆடல்கள் வரையப்பட்டமைக்குப் பரவலான சான்றுகள் உள்ளன.

இதனோடிணைந்த பானை தட்டி ஆட்டம் என்ற ஆடலும் பண்டைய யாழ்ப்பாணத்து மரபிலே காணப்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. பெண்கள் தமது இடக்கையில் பானையொன்றை ஏந்தி வலக்கை விரல்களின் பின் பக்கத்தால் தட்டி ஒலியெழுப்பிய வண்ணம் வட்டம் சுற்றி ஆடி துர் ஆவிகளை விரட்டுதல் உண்டு. அவ்வாட்டத்துக்குத் தலைமை தாங்கிய பெண் வாய்த்தலைச்சி எனப்பட்டாள். தொல்குடி மக்களிடத்தில் காணப்பட்ட பாம்பு நடனமும் தமிழர்களது நடனப் பாரம்பரியத்திற் காணப்பட்டது. தொல் குடியினரது பாம்பு நடனம் பற்றிய விரிவான ஆய்வினை வில்லியா பி லோலெர் (Lilla B Lawler 1949) மேற்கொண்டார். அவரது ஆய்வில் பாம்பு தெய்வமாகத் தொல்குடியினராற் கருதப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்து மரபில் நடனமாடுவோர் இரண்டு கைகளையும் ஒன்றிணைத்துப் பாம்பின் படமாகப் பாவனை செய்து ஆடினர். ஆடல் பயபக்தி நிரம்பியதாகவும் நடுக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது.

நாகவழிபாடு யாழ்ப்பாணத்திலும் நீடு நிலைத்திருந்தமைக்குப் பரவலõன வரலாற்றுச் சான்றுகளும் சமயச் சான்றுகளும் காணப்படுகின்றன. இவ்வழிபாடு வளப்பெருக்கோடும் நேரடியாகத் தொடர்புபட்டிருந்தது. இளநாகனார், நன்நாகனார், நாகையர், நாகராசர், நாகநாதன், நாகையார், நன்நாகையர், நாகமதி, நாகம்மாள், நாகநதி நாகபூபதி முதலானோர் நாகவழிபாட்டு ஆடல்களிலும் பாடல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

தொல் குடியினரிடத்துக் காணப்பட்ட பிறிதோர் ஆடல் வகையாக விளக்கப்படுவது அக்கினி ஆடலாகும். கேடுவிளைவிக்கும் ஆவிகளைத் தீயினால் விரட்ட முடியும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. தீப்பந்தங்களைக் கையில் ஏந்திய வண்ணம் வலஞ்சுழியாகச் சுற்றியும் தாவியும் ஆடும் ஆடலாக இது அமைந்தது. யாழ்ப்பாணத்து மரபில் இவ்வகை நடனங்கள் மழைக் காலத்தில் இடம்பெற்றன. குத்துக் காலூண்டிக்

கும்மிருட்டில் குழிவைச்சு இருக்கை மரப் பொந்தில் இருப்பிடமாய் கிடக்கிறியோ!

ஓடு ஓடு ஓடு இரு காலும் கிடுகிடுக்க ஓடு ஓடு ஓடு (தீ வெட்டிப்பாட்டு இணுவில்)

தீமைகளை விரட்டியடிக்கத் தீப்பந்தம் ஆடுதல் மிக அண்மைக் காலம்வரை யாழ்ப்பாணத்திற் காணப்பட்டது. தீப்பந்த ஆடலில் இருந்து தீச்சங்கிலி ஆடல் வளர்ச்சியடைந்தது.

அதாவது இரும்புச் சங்கிலியின் இரு புறத்திலும் தீப்பந்தங்களை அமைத்து சுற்றிச் சுழற்சி ஆடுதல் தீச்சங்கிலி ஆடலாயிற்று. தீப்பந்த ஆடலை வளப்பெருக்குடன் தொடர்புபடுத்தி ஆடுதல் உண்டு. மழை காலத்திலே கருவுற்ற பெண்களின் கருக் கலையாமல் இருக்கவும், பசுக்களின் கருக்கலையாமல் இருக்கவும் தீப்பந்த ஆடல் ஆடப்பெற்றது. தீ ஆடல்களில் இருந்துதான் ஆடலுக்கும் தோற்கருவிகளுக்குமுரிய தத்தகாரச் சொற்கட்டுக்கள் வளர்ச்சியுற்றன.

பழங்குடி மக்களது ஆடல்களில் விலங்கு நடனங்கள் சிறப்பார்ந்து அமைந்திருந்தன. (Lawler 1964) அவர்களது வாழ்க்கை விலங்குகளைப் புரிந்து கொள்வதுடனும் விலங்கு பற்றிய உணர்வுகளுடனும் இணைந்திருந்தது. பயமூட்டிய விலங்குகள், மகிழ்ச்சியூட்டிய விலங்குகள் என்றவாறு விலங்குகள் பாகுபடுத்தப்பட்டன. விலங்குகளை உற்றுநோக்கிய வேளை சிலவகையான விலங்குகளிடத்து ஆடல் இயல்புகள் இருத்தல் பழங்குடியினரால் உணரப்பட்டன. (Curt Sache 1937) யானை, மந்தி, குதிரை, பூனை முதலாம் விலங்குகளும் மயில் ,வான்கோழி, முதலாம் பறவைகளும், தேனீக்களும் நடனம் ஆடுதல் பண்டைய மக்களது புலக்காட்சியின் வெளிப்பாடுகளாயின. யாழ்ப்பாணத்து மரபில் மயிலாட்டம் நிலைத்திருந்தது. மயில்நடை, மயில் கொத்து, மயில் தாவல், வனப்பு, மயிற்சாயல், கிண்டிகை முதலான ஆடல் வகைகள் இனங்காணப்பட்டன. அச்சங்களைப் போக்கவும் அபாயங்களை நீக்கவும் நல்லவை அருளவும் மயில் நடனம் துணை புரியும் என்பது யாழ்ப்பாணத்து ஆடல் மரபின் நம்பிக்கையாயிற்று. வேல் உண்டு. வினை இல்லை மயில் உண்டு பயமில்லை என்ற தொடர் முருக வழிபாட்டுடன் மயில் நடனம் இணைந்து வளர்ந்தமைக்கு சான்றாயிற்று.

"ஆடு மயிலே ஆடு ஆனந்தக் கூத்தாடு சூடு மயிலே சூடு சுந்தரத் தாழி சூடு வந்த வினையகல வானம் பளிச்செடுக்க கந்தன் அருள் சுரக்க கான வெளியாடு' ஆதி முகக் கடவுள் அப்பன் புகழ்பாடி தோகை விரித்தாடு சுந்தரக் கூத்தாடு (மயிற்பாட்டு, அளவெட்டி)தமிழர்களது ஆடல் மரபில் ஐம்பூதங்களைப் பற்றிய ஆடலும் தேடலும் சிறப்புப் பெற்றிருந்தன. இயற்கைச் சமநிலையோடு மனித வாழ்க்கைச் சமநிலையும் இணைந்திருந்தமை உணரப்பட்டது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் முதலியவற்றை வாழ்த்துதலும் வழிபடுதலும் ஆடுதலும், பாடுதலும், யாழ்ப்பாணத்தில் நிலை பெற்றிருந்தன. இயற்கை வடிவங்களைப் பெண் தெய்வமாக்கிய ஆடலுக்குரிய பாடல் ஒன்று வருமாறு,

"வித்துக் காற்றாய்

வந்தாய் காளி விறைப்போடு நிலமாய் வந்தாய் காளி கொத்துத் தணலாய் வந்தாய் காளி கோதில் வெளியாய் வந்தாய் காளி' (காளி அம்மன் பாட்டு, அளவெட்டி)

ஒவ்வோர் இயற்கை வடிவங்களையும் ஒவ்வொரு வகையான ஆடலாற் புனையும் மரபு யாழ்ப்பாணத்திற் காணப்பட்டது. தீயாட்டம் துள்ளிப் பாய்ந்து ஆடும் ஆடலாயிற்று. நீர் ஆட்டம் அலை நெளிப்பு ஆடலாயிற்று. காற்றோட்டம் தாவலும் சுழற்சியும் கொண்டதாயிற்று. நில ஆட்டம் அரை மண்டி ஆடலாயிற்று. ஆகாய ஆட்டம் துள்ளி எழுந்து வெளியில் ஆடும் ஆடலாயிற்று. வளப்பெருக்கோடு இணைந்த மாம்பழ நடனம் என்ற ஒருவகை நடனமும் யாழ்ப்பாணத்திலே காணப்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. மாம்பழக் காலத்தில் அவற்றைக் கையில் ஏந்தி வந்து எறிவது போல் ஏனைய பெண்கள் ஏந்தும் வண்ணம் எறிந்தும் ஏந்தியும் ஆடும் ஆடலாக அமைந்தது. பெண்கள் குழுவாக ஆடும் ஆடலாக அது விளங்கியது. "முருகனுக்குத் தந்த பழம் மாம்பழம் முந்தி முந்தி காய்ச்ச பழம் மாம்பழம் மருமகளுக்குத் தந்த பழம் மாம்பழம் மாவிளக்குப் படைச்ச பழம் மாம்பழம் அம்பலவர் தந்த பழம் மாம்பழம் (மாம்பழப்பாட்டு, இணுவில்) என்று பாடியவாறு பெண்கள் வட்டம் சுற்றி மாம்பழங்களை எறிந்து ஏந்தி ஆடுவர். யாழ்ப்பாணத்து நடன மரபுகளை ஆராயும் பொழுது, உலகின் தொல் குடியினரிடத்துக் காணப்பட்ட நடனங்களுக்கும் யாழ்ப்பாணத்துப் பூர்வீக நடனங்களுக்குமிடையே பல ஒப்புமைகளைக் காண முடியும்.


(பேராசிரியர் கலாநிதி சபா. ஜெயராசா எழுதிய ""ஆடற்கலை'' என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.)

3 comments:

Anonymous said...

SECRET SEXUAL EXERCISE Methods for Men: Prolong Your Sexual Staying Power up to 2 (Two) Hours or More. A Safe and Simple Secret Exercise Does it. There're other Benefits to Sexual Exercise Methods (a) Harder Erection (b) Longer Erection (c) Stop Premature Ejaculation, Program that has been Carefully Designed to Effectively Help Men of all Ages put an End to Premature Ejaculation Forever. (d) Penis Enlargement (e) Deeper Sensations during Orgasm (f) Total Potency and (g) Better Control.

Enlarge Penis, Prolong Your Sexual Staying Power Two Hours and More; Drive and Fuck Your Wife/Partner Wild, Leak her Ass Hole / Anal and Satisfying her beyond her Expectations. Guaranteed. Feel Younger and Stronger.

Secret-Exercise and Virility Methods for Man (English Version) UK £ 20.00. Secret Exercise and Virility Methods Sale Permission in your Name for Business and Golden MLM Business UK £ UK £ 50.00 (One time payment). We quote unbelievable low and low price. Now We Sell Secret Exercise and Virility Methods with Sales Permission only. It will Cost You UK £ 50.00 (One time payment) including Postage and Handling Charge. Please send UK £ 50.00 for the Exercise Methods.

MONEY Making Business Opportunity: Sell the Exercise Methods @ UK £ 20.00 Worldwide Make Money. Exciting Money Making MLM Business Offer. No Royalty, No Prior Permission is Required for Selling the Exercise Methods Worldwide. Sell the Exercise Methods @ UK £ 20.00 Worldwide Make UK £ 2000.00 to UK £ 5000.00 More Month with the MLM Business. Make Million Pound Starling in an Easy way. Worldwide Legal.

GOLDEN MLM BUSINESS: You will Receive full Authority to Sell the same Worldwide in Your Name even You can Sell the Exercise Methods with Sales Permission and Allow them to Sell the Package for Making Money and Receive One Time Royalty UK £ 50.00 to UK £ 5000.00 from them, Sell Thousand Copies Make Million Pound Starling. Make this incredible Money with the Risk Free MLM Business. It will Cost only UK £ 50.00 (One time payment) including Postage and Handling Charge. Send UK £ 50.00 for the Exercise Methods. Worldwide Legal.

Methods of Payment: Accept Cash. Send by Western Union. Write Your Postal Address and Send to Email: ashekvu@gmail.com. Required the following:

Name :
Address :
Email :
UK £ 50 : Send Through Western Union or Cash to the following Address.

Ashek E. Alahi
GPO Box-148
Dhaka-1000, Bangladesh
Email: ashekvu@gmail.com

And confirm me by Email. After receiving payment I will send the same by Express post/Email. No question asked, if you are interested you may please collect Secret Sexual Exercise Methods for Men.

Thank You. Wish you best of Luck !!!

Anonymous said...

i like......

Woman Finger Ring said...

Send Worldwide 125,000,000 Emails everyday forever! Blast Your Ad To 125 Million Targeted Prospects. Once you Join, you are a member for life. Blast once a day, every day, forever! Over 2 Million New People Joining the lists every Month.
http://www.vula1.webs.com/
http://www.sites.google.com/site/email125m/

Bulk Email Marketing 90,000,000 Opt in Email Package. Connect with 90 Million People 100% Spam Free Using this Easy to Use Bulk Email Marketing Service.
http://www.vula2.webs.com/
http://www.sites.google.com/site/email125m/

Secret Sexual Exercise Methods for Men - Overcome Most Sexual Problems Frigidity, impotence, Erection, Orgasm Lack, Premature Ejaculation
http://www.vula1.webs.com/
http://www.sites.google.com/site/email125m/

25,000,000 Fresh USA Email Leads Download Your US Residential Email List - Over 25 Million - All 50 States - With Opt-In Data
http://www.vula2.webs.com/
http://www.sites.google.com/site/email125m/