Friday, September 12, 2008

ஓவியர் ரவிவர்மா


கேரளத்து ஓவியர் ரவிவர்மா சரஸ்வதி, லட்சுமி என்று அழகான பெண் உருவங்களை உருவாக்கினார். சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அழகான சேலைகளையும் நகைகளையும் கொண்டு அவர்களை அழகு செய்தார். உதாரணமான இந் தியப்பெண் உருவத்தையும் உருவாக்கினார். இது தான் இந்தக்காலத்திலும் அழகான பெண்ணைப் பார்த் ததும் 'மகாலட்சுமி போல் இருக்கிறாய்" என்ற வசனத்துக்கு காரணமாகியது.

ரவிவர்மாவின் காலத்துக்கு முன்பு பெரும்பாலான இந்துப்பெண் தெய்வங்களை சிலைகளிலும் ஓவியங்களிலும் ஒவ்வாத (unpropotional) உடல் அமைப்புகளுடன் செதுக்கப்பட்டு, வரையப்பட்டு இருந்தன. ஆபிரிக்க பெண்களின் மார்பகங்களையும் பின்பகுதியையும் ஐரோப்பிய பெண்களின் கால் அமைப்பையும் கொண்ட சிற்பங்கள், ஓவியங்கள் செதுக்கப்பட்டன, வரையப்பட்டன. தற்காலத்திற்கு ஏற்ப விரசம் ஏற்படாது வரைந்த ரவிவர்மா 2006 ஒக்டோபர் இரண்டாம் திகதியில் இறந்து நூறு வருடங்களாகின்றன. இவரது ஓவியங் கள் நிரந்தரமாக இளமையுடன் நித்தியமா னவை.

இரண்டு வருடங்களுக்கு முன் திருவனந்தபுரத் திற்கு குடும்பமாக சென்றபோது எனது குடும்பத்தில் மற்ற வர்கள் ஷொப் பிங் போன போது ஆட்டோவை எடுத்துக் கொண்டு ரவி வர்மாவின் ஓவியங்கள் உள்ள மியூசியத்துக்கு சென்றேன். 'நிலா ஒளியில் பெண்" என்ற ஓவியத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இருந்தேன். மூன்று மணி நேரம் மட்டுமே என்னால் அங்கு செலவழிக்க முடிந்தது என்ற கவலையுடன் வெளிவந்தேன். உலகப் புகழ்பெற்ற ஐரோப்பிய ஓவியர்களான வான்கோ "பிக்காசோ, சல்வடோர்' டாலி போன்றவர்கள் சாதாரண மக்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. படித்தவர்களிடம் மட்டுமே இவர்கள் புகழ் பெற்றார்கள். வேதாகமங்களை வரைந்த லியனாடோடாவின்சி போன்றவர்க ளினதும் ஓவியங்கள் சாதாரண கிறிஸ்தவர் களுக்கும் தெரியாது. இதேவேளை இந்தி யாவின் தெருக்களில் படம்கீறிப் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனிடமும் அவனை அறியாமல் ரவிவர்மாவின் தாக்கம் பதிந்துள்ளது.

கேரளாவின் கிளிமனுர் என்ற சிறுகிராமத் தில் பிறந்து சிறுவயதில் மாமாவால் வோட் டர்க்கலர் ஓவியங்களையும் பின்பு ஒயில் ஓவியங்களை திருவாங்கூர் சமஸ்தானத் தின் ஆதரவிலும் பயின்றார். ராஜா ஆயிலிய திருநாளால் இவரது ஓவியத்திறமை ஊக்கு விக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இராஜ குடும்பம், பிரித்தானிய பிரபுக்களின் உருவங்களை வரைந்தார். 1873இல் வியன்னாவில் நடந்த ஓவியக் கண்காட்சியில் பரிசுபெற்று இந்தியா வின் தலைசிறந்த ஓவியர் என பெயர் பெற்றார்.

சமஸ்கிருத செவ்விலக்கியங்களான இராமா யணம், மகாபாரதம், சாகுந்தலம் என்பவற்றின் காட் சிகளுக்கு வண்ணவடிவம் கொடுத்து கோடிக்கணக் கில் பதிப்பிக்கப்பட்டது.

இவரால் வரையப்பட்ட கடவுளர் உருவங்கள் படங்களாகவும் கலண்டர்கள் ஆகவும் இன்னும் வீடுகளிலும் பூசை அறைகளிலும் கோடானகோடி மக்களிடம் உள்ளன. எத்தனை பேருக்குத் தெரியும், இவர்கள் வணங்குவது ரவிவர்மாவின் ஓவியத்தைதான் என்பது!?

No comments: