Tuesday, October 28, 2008

நாட்டியத்திற்கு


பரதநாட்டியம் என்ற கலை அடையாளப்படுத்துவது அது தரித் திருக்கும் ஆடைகளையும், அணி கலன்களையும் சார்ந்தது என்று சொன்னால், அதை மறுப்பவர் யாருமில்லை. அந்த கலையை சுவாசிப்பவர்களும்,,ரசிப்பவர் களும் பெருகிவருவதற்கு இந்த தோற்றபொலிவு கூட ஒரு காரணம் என்று கூறலாம். ஒரு கலைஞரின் பார்வையிலும்,பார்வையாளர் களின் கோணத்திலும் பரதம் என்ற கலை மனதில் பதிந்திருப்பது ஒப்பனை,விசேட அணிகலன் மற்றும் ஆடை கலந்த கலவை யாகத்தான்.

""ஒரு கலை, எந்தவித தொழில் நுட்ப உதவியும் இல்லாமல், இசைக்கலைஞர்களை மட்டும் உதவிக்கரமாக கொண்டு செயல்பட்டு, பார்வையாளர்களையும், தன்னையும் இன்றளவிலும்கவர்ந்திருக்கிறது என்றால் அது பரதநாட்டியம் என்ற கலையாக மட்டும்தான் இருக்கும்'' இது பரதம் பற்றி பிரான்சு நாட்டு இதழ் வெளியிட்ட குறிப்பு. இதை இங்கே குறிப்பிட வேண்டியதன் அவசியம் என்னவெனில், பரதக்கலையை ஜீவன் குறையாமல் வைத்திருக்கச் செய்யும் சிலவற்றைப் பற்றி கூறு வதற்காகத்தான். நாட்டிய கலைஞருக்கு ஆடை, சலங்கை, ஆபரணங்கள், ஒப்பனை ஆகியவற்றில் தற்போது மற்றவர் கள் உதவி செய்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் இவையெல்லா வற்றையும் நாட்டியம் கற்பிக்கும் குருக்களே கவனித்துக் கொண்ட னர். ஆனால் தற்போது இதற் கென்று பல தனியார் நிறுவனங் கள் செயல்படுகின்றன. அதே போல்.நாட்டியத்தில் பயன்படுத்தப் படும் தாளம், தாளக்கட்டை ஆகிய வற்றையும் தற்போது சில தனியார் நிறுவனங்களே அமைத்து தருகின்றன.

சலங்கையை பொறுத்தவரை பழங்காலத்தில் கும்பகோணம் பகுதியில் தயாராகி வந்ததைத் தான் அனைத்துக் கலைஞர்களும் பயன் படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது குஜராத் மாநிலத்தில் தயாராகி வரும் எடை குறைந்த சலங்கையைதான் அனைத்துக் கலைஞர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் ஆடையிலும் தற்போது பல வண்ணங்கள் கலந்ததையும், விசேடமாக வடிவமைக்கப் பட்டதையும் அணிகிறார்கள், ஆனால் யாரும் இந்த விசிறி மடிப்பை அவ்வளவாக விரும்பு வதில்லை. இருந்தாலும் பாரம் பரியம் கருதி இதனை போற்றி பாதுகாத்து வருகின்றனர். தாளத் திலும் தற்போது எடை குறை வானதையே ஜதி சொல்பவர் களும், நட்டுவானர்களும் விரும்பு கின்றனர். அணிகலன்கள் அணி வதிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. எடை குறைவாகவும், தங்க முலாம் பூசப்பட்டதையும் தான் விரும்புகின்றனர். ஒரு சிலரே வைரம் பதித்த தங்க நகைகளை விசேடமாக வடிவமைத்து அணிகின்றனர்.

ஆடை,அணிகலன், தாளம் உள்ளிட்ட பரதநாட்டியத்திற்கு தேவைப்படும் அனைத்திலும் பாரம்பரிய அடையாளத்தை மீறா மல் புதுமை புகுத்தப்பட்டு வருவதை அனைவரும் வரவேற்க தொடங்கியிருப்பது சிறந்த மாற்றத் திற்கான அடையளங்கள் என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிப் பதை நாமும் ஆமோதிப்போம்.

No comments: