Tuesday, October 28, 2008

இந்திய இஸ்லாமிய கட்டிடக்கலை


இந்தியாவில் புகழ்பெற்ற பல கலைகளுள் கட்டிடக் கலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய வரலாற்றில் பல காலகட்டங் களில் கட்டிடக்கலை பலவிதமான மாறுதல்களைக் கண்டுள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் இஸ் லாமியர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்ட கட்டிடங்கள் இன்றளவும் காலத் தால் அழியாத நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன.

இந்திய இஸ்லாமிய கட்டிடக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் விளங்குகிறது. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இந்திய இஸ்லாமியக் கட்டிடக் கலை குறித்துக் காண்போம். இஸ்லாமியர்கள் இந்தி யாவினுள் 12ம் நூற்றாண்டில் நுழைந்து, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் இந்திய கட்டிடக் கலை யில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது என்றே சொல்லலாம். இவர்களது வரவுக்குப் பின்னர் இந்தியக் கட்டிடக்கலையினுள் சில புதிய உத்திகள் புகுத்தப்பட்டன.

உதாரணமாக இயற்கை வடிவங் களுக்குப் பதிலாக செதுக்கப்பட்ட வடிவங்களை உபயோகிப்பது, புனித எழுத்துக்களைப் பொறிப்பது, உட்புறக் கட்டமைப்புக்கு வண்ண மாபிள் கற்கள் உபயோகிப்பது எனப் பல மாறுதல் களைக் கொண்டு வந்தனர். இஸ்லாமியக் கட்டிடக் கலையில் காலியாக இருக்கும் இடங்களை கூம்பு கள் வைத்து அதனையும் அழகுபடுத்தி னர். ஆர்ச் மற்றும் கூம்புகள் அமைப்பது உண்மையில் இஸ்லாமியர்கள் கண்டு பிடித்தது இல்லை. இதனை அவர்கள் பிற்கால ரோமானியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.

இஸ்லாமியர்கள் தான் இந்தியக் கட்டிடக் கலையில் முதன் முறையாகக் கட்டிடம் கட்ட சிமெண்ட் போன்ற பொருளை உபயோகித்தனர். மேலும் கட்டிடம் கட்டுவதில் சில விஞ்ஞானப் பூர்வ முயற்சிகள் செய்தனர். இதன் காரணமாகத்தான் இன்றள வும் அந்தக் கட்டிடங்கள் எந்த வித சேதாரமும் இன்றித் திடமாக இருக்கின் றன. இதுபோன்று இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக் கலையும் இஸ்லாமிய முறையும் கலந்து உருவாகிய புதிய கட்டிடக் கலை இந்திய இஸ்லாமியக் கட்டிடக்கலை என்று அழைக்கப்பட்டது.

இஸ்லாமியக் கட்டிடக் கலை இந்தியாவினுள் பிரபலமடைவதற்கு முன்னரே எகிப்து, ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் பிரபலமடைந்துவிட்டது. எனினும் இந்த நாடுகளில் செங்கல், பிளாஸ்டர் போன்ற பொருட்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களே இருந்தன. ஆனால் இந்திய இஸ்லாமியக் கட்டிடக்கலையில் அலங்காரக் கற்கள், டைல்ஸ்கள் உபயோகிக்கப்பட்டன. இந்தியக்கட்டிடக் கலை நிபுணர்கள் பல நூற்றாண்டுகளாக கற்களைக் கையாளு வதில் வல்லவர்களாக இருந்ததனால் இது சாத்தியமானது. இந்தியாவிலுள்ள இஸ்லாமியக் கட்டிடங்கள் மதம் சார்ந்தது மற்றும் பொது வானது என இரண்டு வகையாக உள்ளன. மசூதிகளும், மினார்களும், இஸ்லாமி யர்களின் ஆன்மீக வழிபாட்டுத் தலங்களாக விளங்குகின்றன. இஸ்லாமிய அரண்மனைகளும், கோட்டைகளும் பொதுவானதாக அமைக்கப்பட்டிருக் கின்றன. இந்திய இஸ்லாமியக் கோட்டைகள் அதனுள் ஒரு சிறிய நகரை உள்ளடக்கி யிருக்கின்றன. மேலும் கோட்டையின் சுற்றுப்புறத்தில் எதிரிகளைத் தாக்குவ தற்கான ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக் கின்றன. இந்திய மசூதிகளில், பிரம்மாண் டங்களும் மிகவும் குறைவு. மசூதிகள் ஒரு திறந்த வெளியினைச் சுற்றிலும் தூண்கள் அமைக்கப்பட்ட தாழ்வாரங் களையும் கொண்டிருக்கும். அவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய திசையினைக் குறிக்க மிஹ்ரப் அமைக்கப்பட்டிருக்கும். இதன் வலப்புறத்தில் மிம்பார் அமைக்கப் பட்டிருக்கும்.

இங்கிருந்துதான் இமாம் வழிபாட் டினை நடத்துவார். அங்கிருக்கும் ஒரு உயர்த்தப்பட்ட மேடையில் இருந்து தான் வழிபாட்டுக்கு மக்களை அழைப் பர். இதுபோக இறந்த உடல்களை அடக்கம் செய்ய டூம்கள் உள்ளன. இவை மசூதிகள் போல் சாதாரண மாக இல்லாமல் சிறந்த அலங்காரங் களைக் கொண்டிருக்கும். இதற்கு உதாரணமாக இந்தியாவில் தாஜ் மஹாலையும், மைசூரிலுள்ள கோல்ரும்பஸ் ஆகியவற்றையும் குறிக்கலாம்!

No comments: