உலக நாடுகள் பலவற்றுக்கு முன்னோடியாக இருந்தது இந்தியக் கலாசாரம். இது மிகவும் தொன்மையான கலாசாரம். மேற்கத்திய நாடுகளில் மக்கள் சேர்ந்து வாழத்தொடங்கும் முன்னரே தோன்றிய கலாசாரம். இத்தகைய தொன்மையான நாகரிகத்தையும் கலாசாரத்தையும் கொண்ட இந்தியாவில் இல்லாத கலைகளே இல்லை எனலாம். எப்படி இந்திய நாகரிகம் மற்ற நாகரிகங்களுக்கு முன்னோடியாக இருக்கிறதோ அதே போல் கலைகளும் பல மற்ற நாட்டுக் கலைகளுக்கு முன்னோடியாக இருந்திருக்கின்றன. இதற்குச் சிறந்த சான்றாக இந்திய ஓவியக் கலையினை எடுத்துக் கொள்ளலாம். முதல் இந்திய ஓவியங்கள் என்ற பெருமையினை வரலாற்றுக்கும் முந்தைய கால பாறை ஓவியங்களே பெறுகின்றன.
பிம்பெட்கா என்ற இடத்தில் உள்ள பாறை ஓவியம் சுமார் கி.மு 5500ஆம் காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த எல்லோரா தூண்கள் மிகச் சிறந்த இந்திய ஓவியங்களைத் தாங்கி நிற்கின்றன. இந்த ஓவியங்களில் உள்ள சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்கள் பலதரப்பட்ட தாமிரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இயற்கை பொருட்களில் வண்ணங்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம் ஏழாம் நூற்றாண்டு காலத்திலேயே இந்திய ஓவியர்களுக்குத் தெரிந்தது. சில பெளத்த இலக்கியங்களில் அக்கால மன்னர்களின் அரசவையில் ஓவியத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவற்றில் பல கட்டிடங்கள் இப்போது இல்லாததால் அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க இயலவில்லை.
முதலாம் நூற்றாண்டுக் காலத்தில் இந்திய ஓவியங்களுக்கு சதங்கா என்ற பெயரில் சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. சதங்கா என்றால் ஆறு கரங்கள் என்று பொருள். ஆறு விதமான வழிமுறைகளைக் கூறியிருந்தமையால் அதனை சதங்கா என்று அழைத்தனர். இதனைத் தொடர்ந்து வந்த பெளத்த ஓவியங்கள் இந்த சதங்கா இந்திய ஓவியங்களில் கடைபிடிக்கப்பட்டதற்குச் சான்றாக விளங்குகின்றன. ரூபபேதா, பிராமனம், பவா, லாவண்ய யோஜனம், சத்ஸ்யம், வர்ணிகபங்கா என்று ஆறு விதமான வழிமுறைகளைச் சதங்கா என்று அழைத்தனர். இதில் ஓவியத்தின் தோற்றம் குறித்துச் சொல்வது ரூபபேதா. ஓவியத்தின் சரியான அளவுகளைச் சொல்வது பிராமனம், ஓவியத்தின் உணர்வுகளைச் சொல்வது பவா, ஓவியத்தின் கலைநயத்தைச் சொல்வது லாவண்ய யோஜனம், ஓவியம் வரைய சரியான முறையில் வண்ணம் மற்றும் வரையும் கோல் பிரயோகம் பற்றிக் கூறுவன சத்ஸ்வம் மற்றும் வர்ணிகபங்கா ஆகும்.
16ஆம் நூற்றாண்டில் இருந்து 18ஆம் நூற்றாண்டுவரை இந்தியாவின் மேற்குப் பகுதியில் மினியேச்சர் ஓவியம் என்ற வகை ஓவியங்கள் உருவாகின. இந்தச் சிற்றோவியங்கள் அந்தக் காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு ஓவிய விளக்கங்கள் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டன. சில ஜெயின் புத்தகங்களில் இதுபோன்ற சிற்றோவியங்கள் விளக்கப் படங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை இரண்டிலிருந்து நான்கு அங்குல அளவில் இருந்தன.
11 மற்றும் 12ஆம் நூற்றாண்டுகளில் இருந்த பெரிய அளவிலான சுவர் ஓவியங்களே பிற்காலத்தில் உருவான சிற்றோவியங்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த வகை சிற்றோவியங்கள் முதலில் பனை ஓலைகளில் எழுதப்பட்ட எழுத்துக்களுக்கு விளக்கமாகவே வரையப்பட்டன. இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் பெளத்த மற்றும் ஜெயின் இலக்கியங்களாக இருந்தன. கிழக்கு இந்தியாவில் புத்த மதத்தின் கலைக் கூடமாக நளந்தா, ஓதண்டபு, விக்ரம்ஷிலா மற்றும் சோமர்புரா ஆகிய இடங்கள் இருந்தன.
அடுத்ததாக இந்திய ஓவியங்களுக்குப் பெருமை சேர்த்தது மொகல் ஓவியங்கள். 14ஆம் நூற்றாண்டு வரை எழுத்துப் படைப்புக்களுக்குப் பனை ஓலைகளே பயன்படுத்தப்பட்டன. 14ஆம் நூற்றாண்டில் தான் பனை ஓலைகளுக்குப் பதிலாக எழுத்துப் படைப்புக்களுக்கு பேப்பர் அறிமுகப்படுத்தப்பட்டது. 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் ஜெயின் வகை ஓவியங்கள் முக்கியத்துவம் பெற்றன. மன்னர் நசிர் ஷா காலத்தில் நிமத்னமா என்ற புத்தகத்தில் மண்டு என்ற ஓவியர் வரைந்த சிற்றோவியங்கள் ஓவியக் கலையில் ஒரு புதிய பாதையை வகுத்தன. பின்னர் அக்பர் காலத்தில் இந்திய சிற்றோவியங்கள் புதியதோர் பரிமாணம் பெற்றன. இந்தியாவில் முதல் கலைக் கூடம் அமைத்த மன்னர் என்ற பெருமை அக்பரைச் சேரும். இந்தக் கலைக்கூடத்தில் மிர் சய்யத் அலி மற்றும் அப்தும் உல் சனாத் கான் என்ற இரு பெர்சிய ஓவியர்களின் மேற்பார்வையில் இந்திய ஓவியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அக்பர் கட்டிய ஃபதேபுர் சிக்யினை அலங்கரிக்க ஏகப்பட்ட கலைஞர்கள் பணி செய்தனர்.
இவ்வாறு இந்திய ஓவியங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வளர்ந்துள்ளன.