Friday, October 3, 2008

பொற்கோவில்


உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தியா வந்து செல்லும் சுற்றுலாப் பயணி களில் பலரும், தவறாமல் வந்து போகும் நகரங்கள் பல. அவற்றுள் குறிப்பிடத் தகுந்த நகரம் அமிர்தசரஸ். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான சண்டிகரிலி ருந்து 235 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இவ்வூர். உலகெங்கிலுமுள்ள சீக் கிய மதத்தினரின் புனிதத்தலமும் இதுதான். ஆன்மீகப் பயணம் வருவோரும், சுற்றுலாப் பயணிகளும் சுறுசுறுப்பாய் இயங்கி வரும் ஊர் இது. வந்து சென்றவர்கள் மனதில் நீங்கா இடம்பெற்று நிற்கும் ஊர் இது. ஒருமுறை வந்தவர்களை மீண்டும் வரத் தூண்டும் ஒரு புனித ஆலயம் தங்கக் கோவில். கோல்டன் டெம்பிள் என்று அறியப்படும் "ஹர்மந்திர்' பார்வையாளர்களின் ஆவலைத் தூண்டும் ஒரு அதிசயம்.

குரு அர்ஜுன் தேவ் அவர்களால் 1588 ஆம் ஆண்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப் பட்டது. சீக்கிய மத வழிபாட்டின் மையமாக இவ்வாலயம் உருவாக்கப்பட்டது. அமிர்த சரஸ் நகரின் மையப்பகுதி யில் இவ்வாலயம் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. சீக்கிய மதத் தினரின் நம்பிக்கைகள் ஒவ்வொன்றும், இந்த இடத்தின் ஒவ்வொரு அமைப்பிலும் பிரதி பலிக்கப்படுகிறது.

ஒரு குளத்தின் மையத்தில் எழுப்பப் பட்டுள்ள இந்த அற்புத ஆலயம், ‘குரு அமர்தேவின்’ சிந்தை யில் உருவானது. கோவில் முழுமை யாக உருப்பெற பல ஆண்டுகள் ஆயின. கோவிலின் பிரதான மண்டபம் எழுப்பப் படும் முன்னரே, குளத்தின் கரைகள் நெடுகிலும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது. இதை முன்னின்று முடித்தவர் ‘பாபா புத் தாஜி’. குரு அர்ஜுன் தேவ் திட்டமிட்டிருந்த படிச் சுட்ட செங்கலும், சுண்ணாம்பும் கொண்டு ஆலயம் எழுப்பப் பட்டது. மகாராஜா ரஞ்சித் சிங் இந்த ஆல யத்தை மறுசீரமைப்பு செய்தார். ஒரு பிரம் மாண்ட ஆலயம் உருப்பெற்றது. இது கட்டிடக் கலையில் ஒரு மாபெரும் அதிசயம். மனிதர்களின் படைப்புகளில் ஒரு அற்புதம் உருவானது. வளமையான அதேவேளையில் புனிதமான இடமாக ‘ஹர்மந்திர்’ஆகிப் போனது. இக்கோவிலுக்கான இடம் உள்ளூர் ஜமீன்தார்களால் நன்கொடையாக வழங்கப் பட்டது. கட்டிடக் கலையில் இந்து மற்றும் முஸ்லிம் மதக்கட்டிடக்கலையின் சிறப் பம்சங்களை உள்ளடக்கியதாக இக்கோவில் உருவானது. கோவில் வளாகத்தை மொத்தத் தில் நோக்கும்போது மிகப் பிரம்மாண்டமான தாகத் தெரிகிறது. நான்கு திசைகளிலும் ‘தியோரி’ எனப்படும் நான்கு வாசல்கள் அமைக்கப்பட்டுள் ளன. குளத்தின் நடு வே அமைந்துள் ளது ஒரு பெரிய மேடை. கோவி லைச் சுற்றிவரும் பிரகாரமானது (ப்ர தாக்ஷனா) நடை மேடையுடன் பாலங்களால் இணைக்கப்பட்டுள் ளது. கோவிலின் பிரகார மண்ட பத்தை அடைய பிர காரத்திலிருந்து ‘ஹர் கி பாரே’ எனும் கடவுளை நோக்கிச் செல்லும் படிகள் அமைக்கப்பட்டுள் ளன. அனைத்து இடங்களிலும் தூய்மை பளிச்சிடுகிறது. இவ்வாலயத்தின் பராமரிப்புப் பணியில் நூற்றுக்கணக்கான பேர் ஈடுபட்டிருப்பதை அதன் அசாத்தியத் தூய்மையினால் உணரமுடியும்.

‘ஹர் கி பரே’ இன் முதல் தளத்தில் ‘குரு கிரந்த் சாஹிப் ’வாசிக்கப்படுகிறது. குளத்தின் நீரில் தெரியும் சந்நிதியின் பிம்பம் பிர மிப்பை ஏற்படுத்துகிறது. மிகுந்த கலைநயத் துடன் அமைக்கப்பட்டுள்ளது பிரதான சந்நிதி. சந்நிதி முழுமையுமே தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பக்தர் கள் காணிக்கையாகத் தங்கத்தைக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இக் கோவிலின் அமைப்பில் மிகப் பிரதானமாக இடம்பெறுவது இக்கோவிலின் தங்கக் கோபுரம். கோவிலைச் சென்றடையும்போது மனம் அமைதியுற்று விடுகிறது. ஆனந்தப் பரவசத்தில் மூழ்கி விடுகிறது. உறங்கிக் கிடக்கும் ஆன்மா உயிர்ப்பிக்கப்பட்ட உணர்வு மேலோங்கி நிற்கிறது. மெய்ப் பொருளை உணர்ந்துவிட்ட பரவசத்தில் மனம் திளைக்கிறது.

அமிர்தசரஸ் பொற்கோவில் பயணம் வெறும் ஒரு கோவிலுக்கான பக்திப் பயண மாக மட்டும் அமையாது. 29 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வாகா எல்லைக்கு ( இந்திய பாகிஸ்தான் எல்லை ) சென்று வரா மல் நமது பயணம் நிறைவேறாது. இங்கு மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணி வரை நடைபெறும் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சி யாகும். அமிர்தசரஸ் நகரமும், பொற்கோவி லினுள் பெற்ற ஆனந்த அனுபவமும் பயணி களை மீண்டும் ஒருமுறை வரத் தூண்டும். சென்று வந்தவர்களின் அனுபவம் மற்றவர் களுக்கு ஒரு வரவேற்புப் பத்திரமாக அமைந்துவிடும்.

No comments: